உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

அனைத்து மாகாணங்களிலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை நிறுவத் திட்டம்; ஜனாதிபதி அறிவிப்பு.!!!

• எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு; 900க்கும் மேற்பட்ட அதிகாரிகளைப் புதிதாக இணைக்க அனுமதி.

இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அலுவலகங்களை நிறுவுவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது கொழும்பிற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை மாகாண மட்டத்திலும் விரிவுபடுத்துவதற்காக, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (11) நிகவெரட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆணைக்குழுவின் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் 900க்கும் மேற்பட்ட அதிகாரிகளைப் புதிதாக இணைத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கும், அரச சேவையில் இடம்பெறும் சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச சேவையில் இடம்பெறும் இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இத்திட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், மாகாண மட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் ஆணைக்குழுவின் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1222499

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time