உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்; புதிய தேசிய கலைத்திட்டக் கட்டமைப்புக்கு அனுமதி.!!!

• தரம் 1 முதல் 11 வரையான மாணவர் மதிப்பீட்டுக் கட்டமைப்புக்கும் அங்கீகாரம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய.

இலங்கையின் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான கருத்துருப் பத்திரம், திருத்தப்பட்ட தேசிய கலைத்திட்டக் கட்டமைப்பு மற்றும் தரம் 1 முதல் 11 வரையிலான மாணவர் மதிப்பீட்டுக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகப் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான கருத்துருப் பத்திரத்தின் அடிப்படையில், தேசிய கல்வி நிறுவகத்தினால் (NIE) சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட தேசிய கலைத்திட்டக் கட்டமைப்புக்கும் மாணவர் மதிப்பீட்டுக் கட்டமைப்புக்கும் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான மாணவர் மதிப்பீட்டுக் கட்டமைப்பைத் தயாரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் தன்னார்வ ஆலோசகர் சபையுடன் ஒக்டோபர் 09ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய கலைத்திட்டக் கட்டமைப்பு மற்றும் மாணவர் மதிப்பீட்டு முறைமை தொடர்பான இந்த அங்கீகாரம், நாட்டின் கல்வி முறையில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்களின் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1219685

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time