அமெரிக்கக் கடற்படையின் ‘USS TULSA’ போர்க்கப்பல் இலங்கையிலிருந்து புறப்பட்டது.!!!
• கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக பிரியாவிடை.
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கடற்படைக்குச் சொந்தமான ‘USS TULSA (LCS 16)’ போர்க்கப்பல், 2026 ஒக்டோபர் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
குறித்த போர்க்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கு அமைவாக பிரியாவிடை வழங்கும் நிகழ்வு கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.
விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த ‘USS TULSA (LCS 16)’ போர்க்கப்பல், தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்ட பின்னர் இவ்வாறு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
இலங்கைக்கு வருகை தந்திருந்த அமெரிக்கக் கடற்படையின் குறித்த போர்க்கப்பலுக்கான துறைமுக விஜயம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடற்படை மரபுகளுக்கு அமைவாக பிரியாவிடை வழங்கியுள்ளனர்.



