கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ; பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.!!!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, இன்று (09) கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவரது கண்ணில் ஏற்பட்டுள்ள நோய் நிலைமை காரணமாக, சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு மருத்துவப் பரிசோதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சிறைச்சாலை அதிகாரிகள் அவரை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.