உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

‘Clean Colombo’ திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்.!!!

• கழிவு முகாமைத்துவம், கால்வாய் புனரமைப்பு, நகர அழகுபடுத்தல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆராய்வு.

‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘Clean Colombo’ திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஒக்டோபர் 09ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, கொழும்பு நகரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துதல், நீர்ப்பாசனக் கால்வாய்களைப் புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், நகரச் சூழலை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த திட்டங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகள் மற்றும் தயாரிக்கப்பட்ட செயற்திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கொழும்பு மாநகர சபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை ரயில்வே திணைக்களம் ஆகியன இத்திட்டத்தின் முக்கிய பங்குதாரர்களாகக் குறிப்பிடப்பட்டன.

மேலும், ‘Clean Sri Lanka’ திட்டத்தின் ஊடாக சமூக நல்வாழ்வு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் ஒழுக்க விழுமிய மறுமலர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை, கொழும்புக்கான ‘Clean Colombo’ திட்டத்துடன் ஒருங்கிணைப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும் ‘Clean Sri Lanka’ செயலகத்தின் பிரதிநிதியுமான எஸ்.பி.சி. சுஜீஸ்வர, கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் உள்ளிட்ட மாநகர சபை பிரதிநிதிகள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கொழும்பு நகரைத் தூய்மையான, அழகான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து முன்னெடுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1219712

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time