உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 9, 2026

Hot News

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனைச் சிறையில் சந்தித்தார் சவூதிக்கான இலங்கைத் தூதுவர்.!!!

• அனோஜன் நலமாக உள்ளார்; விடுதலைக்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரம்.

மரண தண்டனை விதிக்கப்பட்டு சவூதி அரேபிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனின் நலன் குறித்து ஆராய்வதற்காக, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வட் சிறைச்சாலைக்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார்.

இதன்போது, அனோஜனை நேரில் சந்தித்ததாகவும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ரியாத்திலிருந்து சுமார் 450 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சிறைச்சாலையிலேயே அனோஜன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அனோஜனின் தற்போதைய நிலைமை தொடர்பான தகவல்களை, சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ள இலங்கையின் விசேட சட்டக் குழுவினருக்கு தூதுவர் தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார்.

விடுதலைக்காக விசேட சட்டக் குழு நடவடிக்கை

அனோஜனை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அவருக்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, இலங்கையின் விசேட சட்டக் குழுவினர் கடந்த 6ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குப் பயணித்துள்ளனர்.

சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியிலும், அனோஜனை விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்தக் குழுவினர் தமது பணிகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அனோஜனின் விடுதலை தொடர்பான சட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவரது தற்போதைய நிலைமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1217674

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time