உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

நாட்டின் சீரற்ற காலநிலையால் 20 மாவட்டங்கள் பாதிப்பு; 12 பேர் உயிரிழப்பு.!!!

• 25 பேர் காயம்; ஒருவர் மாயம் – ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்; வெள்ளம், மண்சரிவு அபாயம் தொடர்கிறது.

–கற்பிட்டி – எம்.எச்.எம். சியாஜ்–

இலங்கையை அண்மித்து நிலைகொண்டிருந்த தாழமுக்க வலயம் நாட்டை விட்டு மேற்கு நோக்கி நகர்ந்து வருகின்ற போதிலும், அதன் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை தொடர்ந்து நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களமும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் எச்சரித்துள்ளன.

நாட்டின் 20 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம், மண்சரிவு மற்றும் கடும் காற்று காரணமாகப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

12 பேர் உயிரிழப்பு; 25 பேர் காயம்

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை (23) காலை 6.00 மணிக்கு வெளியிட்ட உத்தியோகபூர்வத் தரவுகளின்படி, சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இதற்கமைய, 27 வீடுகள் முழுமையாகவும் 1,727 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. கம்பஹா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

ஆறுகள், நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரிப்பு

நீரேந்து பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாகப் பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து, வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதுடன், வினாடிக்கு 16,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. கலா ஓயாவிலிருந்து வினாடிக்கு 13,200 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வாரியபொல, நிக்கவரெட்டிய, சிலாபம், பல்லம, ராஜாங்கனை மற்றும் வனாத்தவில்லு உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மண்சரிவு அபாயம்: புகையிரத சேவைகள் பாதிப்பு

தொடர்ச்சியான மழை காரணமாக மலையகப் பகுதிகளில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது. கண்டி, பதுளை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் மலைப்பாங்கான பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

இதன் தாக்கமாக, மலையகப் புகையிரதப் பாதையில் கம்பளையிலிருந்து நானுஓயா வரையிலான சேவைகளும், பேராதனையிலிருந்து மாத்தளை வரையிலான சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, நானுஓயாவிலிருந்து பதுளை வரையிலான பகுதியில் மாத்திரமே புகையிரதங்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசும் அபாயம்

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை, கற்பிட்டி, கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்புகளில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை மீனவர்கள் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்து, வானிலை அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மிகுந்த விழிப்புடன் செயற்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை தொடரும் நிலையில், வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிப்போர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தமது பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1254958

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time