உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்த கிழக்கு ஆளுநர்: அம்பாறையில் விசேட மக்கள் சந்திப்பு.!!!

கிழக்கு மாகாண பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நேரடித் தீர்வு காணும் நோக்கில், கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் ‘மக்கள் தினம்’ நிகழ்வு அண்மையில் அம்பாறை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஏற்கனவே ஆளுநருக்கு கடிதங்கள் மூலம் அறிவித்தும் இதுவரை உரிய தீர்வு கிடைக்காத தனிநபர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது குறைகள் மற்றும் கோரிக்கைகளை ஆளுநரிடம் நேரடியாக முன்வைத்தனர்.

இதன்போது பொதுமக்களின் கோரிக்கைகளை கவனமாகக் கேட்டறிந்த ஆளுநர், அவற்றிற்கு விரைவான மற்றும் சாத்தியமான தீர்வுகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இந்த மக்கள் சந்திப்பில் குறித்த பிரச்சினைகளுடன் தொடர்புடைய பல திணைக்களங்களின் தலைவர்கள், அரச நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து கலந்தாலோசித்தனர்.

மக்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான இடைவெளியை குறைத்து, அரச சேவைகளை திறம்படவும் விரைவாகவும் வழங்குவதற்கான முயற்சியாக இந்த ‘மக்கள் தினம்’ நிகழ்வு அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 931359

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time