உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 21, 2026

Hot News

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

முஸ்லிம் தாதி உதவியாளர்களின் ஆடை உரிமையை உறுதிப்படுத்துங்கள் – ரவூப் ஹக்கீம் கோரிக்கை.!!!

-விருட்ச வேந்தன்-

தாதி உதவியாளர்களின் சீருடை விவகாரத்தில் முஸ்லிம் பெண்களுக்குத்தேவையான உரிமையை நிலைநாட்டும் வகையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களுக்கிணங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழ்ப் பேசும் கட்சிகளின் தலைவர்கள் ஆறு பேர் இணைந்து சுகாதார அமைச்சருக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று (20) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இத்தகவலை வெளியிட்டார்.

எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்ததாவது:

“நான் விரிவாகப்பேசுவதற்கு முன்பு, இங்கு முதல் வரிசையில் இருக்கின்ற அமைச்சர்களூடாக, சுகாதார அமைச்சரிடமும், பிரதியமைச்சர் ஹன்சக விஜயமுனி அவர்களிடமும் தாதி உதவியாளர்களின் ஆடை விடயமாக இவ்வேண்டுகோளை விடுக்கின்றேன்.”

“விசேடமாக நாம் இப்பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப்பேசும் கட்சிகளின் தலைவர்கள், ஆறு பேர் சேர்ந்து ஒரு கடிதத்தை அமைச்சருக்கு அனுப்பியுள்ளோம்.

அச்சீருடை விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தீர்மானத்தை  நிறைவேற்றித்தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

“அதன்படி, உரிய குழுவை நியமித்து, நிலைபேறான அவசியமான மாற்றங்களை ஏற்படுத்தித் தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ரவூப் ஹக்கீம் எம்பி தனதுரையின் போது கேட்டுக் கொண்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1249845

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time