உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 20, 2026

Hot News

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அரசாங்கம் புறக்கணிக்க முடியாது – ஞானசார தேரர் விவகாரத்தில் அமைச்சர் விளக்கம்.!!!

ஞானசார தேரருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக அரசாங்கத்தால் செயற்பட முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (20) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு தற்போதைய அரசாங்கத்தினால் ஏன் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க முடியாது என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னரே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எனவே, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைப் புறக்கணித்து அரசாங்கத்தால் செயற்பட முடியாது என அவர் வலியுறுத்தினார்.

ஒருவரின் அந்தஸ்து, பதவி அல்லது அதிகாரம் எதுவாக இருந்தாலும், நாட்டில் சட்டம் எவ்வித விதிவிலக்குகளுமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களிக்காதவர்கள்கூட, தனிநபர்களின் அந்தஸ்து அல்லது செல்வாக்கைப் பொருட்படுத்தாமல் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றே எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதும், அனைவருக்கும் சமமான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பு என அமைச்சர் ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1246463

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time