கல்லடி இசை, நடனக் கல்லூரி விடுதியில் மாணவி உயிரிழப்பு; பொலிஸார் விசாரணை.!!!
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை, நடனக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த 20 வயதுடைய மாணவி ஒருவர் இன்று (19) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தனது கற்கைநெறியை ஆரம்பித்துள்ளார். முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்த அவர், கல்லூரி விடுதியில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று பிற்பகல் சுமார் 12.00 மணியளவில் விடுதி அறையில் மாணவி உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.