சுவிட்சர்லாந்து – இலங்கை இடையே மீண்டும் விமான சேவை ஆரம்பம்.!!!
• வாரத்திற்கு மூன்று விமான சேவைகள்; குளிர்கால சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு நடவடிக்கை.
சுவிட்சர்லாந்தின் எடல்வைஸ் (Edelweiss) விமான நிறுவனம், குளிர்காலப் பருவத்தை முன்னிட்டு இலங்கைக்கான விமான சேவைகளை இன்று (27) மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம் சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதுடன், வாரத்திற்கு மூன்று விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்த பயணிகளை இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் ஏற்பாடு செய்திருந்த பாரம்பரிய கண்டி நடன நிகழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இலங்கையின் பாரம்பரிய கலை மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இடம்பெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சி, நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையின் தனித்துவமான விருந்தோம்பலை வெளிப்படுத்தியது.
குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விமான சேவை, சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்துக்கு உதவுவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



