உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 26, 2026

Hot News

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி: கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை.!!!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ (ARNAB) சூறாவளி காரணமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (26) வெளியிடப்பட்ட இந்த வானிலை எச்சரிக்கை அடுத்த 12 மணித்தியாலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூறாவளி இலங்கையை நேரடியாகப் பாதிக்காது என எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் காற்றுச் சுழற்சியின் தாக்கம் நாடு முழுவதும் உணரப்படக்கூடும். இதன் காரணமாக, இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், வட அகலாங்கு 10 முதல் 20 வரையிலும், கிழக்கு நெட்டாங்கு 80 முதல் 95 வரையிலும் அமைந்துள்ள கடற்பகுதிகளில் மறுஅறிவித்தல் வழங்கப்படும் வரை மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முழுமையாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வானிலை அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1261478

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time