உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!

Share :

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள்.!!!

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பிரதிவாதிகளுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதேவேளை, எயார்பஸ் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நாளை (28) கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற நீதாயம் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 30ஆம் திகதி தமது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1264097

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time