உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!

Share :

பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிப்பு.!!!

• பிரவுன்ஸ் ஹில் காணி கொள்வனவு வழக்கு: மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்காக மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (27) திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

பிரவுன்ஸ் ஹில் காணி கொள்வனவு தொடர்பான வழக்கில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் பணத்தைப் பயன்படுத்தி, மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேவேளை, குறித்த வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமை காரணமாக, பசில் ராஜபக்ஷவின் பிணைப் பணத்தைப் பறிமுதல் செய்ய கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1264181

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time