உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!

Share :

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு.!!!

• பலத்த மழையால் நீர்மட்டம் அதிகரிப்பு; கொத்மலை ஓயாவை அண்மித்த மக்களுக்கு எச்சரிக்கை.

மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் பலத்த மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் நேற்று திங்கட்கிழமை முதல் திறந்து விடப்பட்டுள்ளன.

நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், அதன் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள கொத்மலை ஓயை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்தும் மழைவீழ்ச்சி அதிகரித்து நீர்மட்டம் உயருமாயின், நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் தன்னியக்கமாகத் திறக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கொத்மலை ஓயாவைப் பயன்படுத்துவோர் மற்றும் அதன் கரையோரப் பகுதிகளில் வசிப்போர் நீரின் ஓட்டம் மற்றும் நீர்மட்ட மாற்றங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும், ஆற்றைக் கடப்பது உள்ளிட்ட ஆபத்தான நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1264189

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time