உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!

Share :

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காட்டு யானை: சம்மாந்துறை சேகப்பற்று வயலில் அடக்கம்.!!!

-தில்சாத் பர்வீஸ்-

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு யானை, கடந்த 24ஆம் திகதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதன் உடல் இன்று (26) திங்கட்கிழமை அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

சுமார் 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட ஆண் காட்டு யானை நோய்வாய்ப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டதை அடுத்து, அதனைக் காப்பாற்றும் நோக்கில் கால்நடை மருத்துவக் குழுவினரும் வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து சிகிச்சைகளை முன்னெடுத்தனர்.

எனினும், மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் குறித்த காட்டு யானை உயிரிழந்தது.

இதனையடுத்து, இன்று யானையின் உடல் சேகப்பற்று வயல் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கையின்போது, சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல். முஹம்மது ஹனீபாவின் வழிகாட்டுதலில் கிராம சேவகர் ஏ.பி.எம். றமிஸ் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1264634

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time