உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

தெதுரு ஓயாவில் வெள்ள அபாயம்: விநாடிக்கு 16,500 கன அடி நீர் வெளியேற்றம்.!!!

• 9 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு வெள்ள எச்சரிக்கை – தாழ்நிலப் பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்.!!!

–கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்–

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ள நிலையில், நீர்ப்பாசனத் திணைக்களம் அவசர வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு சுமார் 16,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெதுரு ஓயா ஆற்றின் மேல் மற்றும் மத்திய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, ஆற்றின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு மேலதிக நீரை வெளியேற்றுவதற்கான மதகுகள் திறக்கப்பட்டுள்ளன.

நீர்த்தேக்கத்துக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து, எதிர்வரும் மணித்தியாலங்களில் நீர் வெளியேற்றத்தின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர் வெளியேற்றம் காரணமாக, வாரியபொல, நிகவரெட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ, ரஸ்நாயக்கபுர ஒன்பது பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஆற்றுப்பள்ளத்தாக்கு மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெள்ள அபாய எச்சரிக்கை 2026 ஒக்டோபர் 23ஆம் திகதி காலை 9.30 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெதுரு ஓயா ஆற்றை அண்மித்த கிராமங்களிலும் தாழ்நிலப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு நகரத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும், ஆற்றைக் கடக்கும் பகுதிகள் மற்றும் வெள்ளம் ஏற்படக்கூடிய வீதிகளினூடாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் தேவையான அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனவே, தெதுரு ஓயா ஆற்றை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தங்களதும் தமது குடும்பத்தினரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1253160

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time