கிழக்கு மாகாண ஆளுநரின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு–பாலமுனை வைத்தியசாலைக்கு பல் மருத்துவ உபகரணம்.!!!
–அஜ்மல்கான்–
பாலமுனை பிரதேச வைத்தியசாலையின் பல் நோயாளர் பிரிவின் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பல் மருத்துவ உபகரணம் இன்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர் செ.மு. றம்சின் அவர்களின் முயற்சியின் பயனாகவும், கிழக்கு மாகாண ஆளுநரின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாகவும் இந்த உபகரணம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
பாலமுனை பிரதேச வைத்தியசாலையின் பல் நோயாளர் பிரிவில் நீண்டகாலமாக அத்தியாவசியத் தேவையாகக் காணப்பட்ட குறித்த உபகரணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளைப் பிரதேச சபை உறுப்பினர் செ.மு. றம்சின் முன்னெடுத்திருந்தார்.
இதன் மூலம், வைத்தியசாலையின் பல் மருத்துவ சேவைகளை மேலும் வலுப்படுத்துவதுடன், பிரதேச மக்களுக்கு மேம்பட்ட முறையில் பல் மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, பல் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைத்து, வைத்தியசாலையின் சேவைத் தரத்தை உயர்த்துவதற்கு இந்த உபகரணம் பங்களிக்கும் என நம்பப்படுகிறது.
பிரதேச மக்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சிக்காக, பிரதேச சபை உறுப்பினர் செ.மு. றம்சினுக்கு மக்கள் தமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

