உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 22, 2026

Hot News

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

மட்டக்களப்பு முதல் அம்பாந்தோட்டை வரை கடல் கொந்தளிப்பு: மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை.!!!

இலங்கையின் மட்டக்களப்பிலிருந்து அம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்புகளில் நிலவும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (22) வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (23) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திருகோணமலை, காங்கேசன்துறை, கற்பிட்டி, கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பிலிருந்து அம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், குறித்த கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த கடற்பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் ஏனைய கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த எச்சரிக்கை தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1252346

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time