ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் விவகார அலகு முக்கியஸ்தர்கள் சந்திப்பு.!!!
ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் விவகார அலகின் விசேட சந்திப்பொன்று இன்று (22) கட்சியின் தலைமைச் செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் விவகார அலகின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் மற்றும் தபால் சேவைகள் முன்னாள் அமைச்சரும், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான அப்துல் ஹலீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்டப் பிரதிநிதிகள் பலரும் இச்சந்திப்பில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.



