உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 22, 2026

Hot News

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

இலங்கை – ருமேனியா இடையே வர்த்தகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பில் முக்கிய ஆலோசனை.!!!

இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையிலான ஆறாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் இன்று (22) ருமேனியாவின் தலைநகர் புக்கரெஸ்டில் நடைபெற்றுள்ளன.

இலங்கைத் தூதுக்குழுவுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமை தாங்கியதுடன், ருமேனியா சார்பில் மூலோபாய மற்றும் உலக விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் அனா கிறிஸ்டினா டின்கா தலைமை தாங்கினார்.

இந்தக் கலந்துரையாடலின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் ருமேனியாவில் வசித்து வரும் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன.

குறிப்பாக, ருமேனியாவில் பணியாற்றி வரும் சுமார் 26,000 இலங்கையர்களின் உரிமைகள், நலன்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியப் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையர்களின் தொழில்சார் தகைமைகளை அங்கீகரித்தல், இலங்கை சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், சுற்றுலா, கல்வி மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துதல் ஆகியனவும் ஆலோசனைகளில் இடம்பெற்றன.

அத்துடன், கொழும்பு – கொன்ஸ்டான்சா இடையிலான கடல்சார் போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 2027ஆம் ஆண்டில் 70 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளன.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை முன்னிட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாட்டு மக்களுக்கும் நேரடியான நன்மைகளை வழங்கக்கூடிய நடைமுறை ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதற்கும் இரு தரப்பினரும் ஆர்வம் வெளியிட்டுள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, இராஜதந்திர உறவுகள் வெறுமனே கலந்துரையாடல்களுடன் மட்டுப்படுத்தப்படாமல், மக்களுக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளையும் உறுதியான நன்மைகளையும் உருவாக்குவதாக அமைய வேண்டும் என வலியுறுத்தினார்.

இலங்கை – ருமேனியா உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும் இந்த அரசியல் ஆலோசனைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1252459

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time