உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!
IMG-20260906-WA0028
சீருடை மாறுகிறது; காவல்துறையும் மாறுமா?

Share :

மத்திய மலைநாட்டில் கனமழை: வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம்; பல பகுதிகளுக்கு எச்சரிக்கை.!!!

இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், கண்டி மாவட்டத்தின் கெலியோய, கம்பளை, நாவலப்பிட்டி மற்றும் பேராதனை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாயம் குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிலைமை மேலும் மோசமடைந்தால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தொடரும் கனமழையால் மண்சரிவு அபாயமும் அதிகரித்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, அம்பகமுவ மற்றும் நோர்வூட் பகுதிகளுக்கு Amber மட்ட மண்சரிவு முன் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பின்படி, மேல் மாகாணம், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு அறிவுறுத்தல்

ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு அருகில் செல்வதைத் தவிர்ப்பதுடன், வெள்ளநீர் பெருக்கெடுக்கும் பகுதிகளில் பயணம் செய்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் உள்ள மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் கிடைத்தால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1169057

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time