உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

சட்டவிரோத மீன்பிடி மற்றும் போதைப்பொருள் கடத்தல்: இரு வாரங்களில் 55 பேர் கைது; 34 படகுகள் மீட்பு.!!!

-கற்பிட்டி – எம்.எச்.எம். சியாஜ்-

இலங்கை கடற்படையினரால் 2026 ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையான இரு வார காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின்போது, சட்டவிரோத மீன்பிடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 50 பேருடன் 33 டிங்கி படகுகளும் ஒரு கனோய் படகும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து பேருடன் ஒரு பலநாள் மீன்பிடிப் படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

திருகோணமலை பவுல் பொயிண்ட், லங்காபட்டுன, நாயாறு, தொடுவாய், கதிரவேலி, மார்பிள் பீச், இறக்கண்டி, யாழ்ப்பாணம் சுண்டிக்குளம், கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, கோவிலன், புதுமாத்தளன், புத்தளம் முகத்துவாரம் மற்றும் கல்லாறு உள்ளிட்ட கரையோர மற்றும் கடற்பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, முல்லைத்தீவு, மூதூர், குச்சவெளி, வாழைச்சேனை, கோட்பே, யாழ்ப்பாணம், மயிலிட்டி மற்றும் புத்தளம் ஆகிய இடங்களிலுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி தெற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து பேருடன் பலநாள் மீன்பிடிப் படகொன்றும் கைப்பற்றப்பட்டது.

குறித்த சந்தேகநபர்களும் படகும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மீன்பிடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினரால் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1241018

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time