உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 25, 2026

Hot News

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

நாத்தாண்டி ரத்மல்ஓயா அணைக்கட்டு உடையும் அபாயம்; பல கிராமங்களைப் பாதுகாக்க இராணுவத்தினர் தீவிரம்.!!!

–கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்–

நாத்தாண்டி, நாராவில பகுதியினூடாகப் பாயும் ரத்மல்ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்து, ஆற்றங்கரைகள் அரிக்கப்படுவதால் அணைக்கட்டு உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

தற்போது பெய்துவரும் அடைமழையினால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், நாராவில, தும்மோதர, கொட்டாரமுல்ல உள்ளிட்ட பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாராவில பகுதியில் ரத்மல்ஓயாவின் குறுக்கே அமைந்துள்ள ‘கதுருகஸ்பெம்ம’ அணைக்கட்டின் நீரைப் பயன்படுத்தி, சுமார் 450 ஏக்கர் விவசாய நிலங்களில் நீண்டகாலமாகப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அப்பகுதியின் விவசாய நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், வடமேல் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் நீர் வழிந்தோடும் விசேட வான்பாயும் (Spillway) கட்டமைப்பு அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

எனினும், இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் பெய்த கடும் மழையினால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கதுருகஸ்பெம்ம அணைக்கட்டுக்கு அருகிலுள்ள ஆற்றுப்படுக்கை வேகமாக அரிக்கப்படத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அரிப்பு மேலும் தீவிரமடைந்து அணைக்கட்டு உடைப்பெடுத்தால், நாராவில, தும்மோதர, கொட்டாரமுல்ல உள்ளிட்ட பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கக்கூடிய அபாயம் இருப்பதைப் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.

இதனையடுத்து, அணைக்கட்டைப் பாதுகாத்து, மக்களின் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுவதைத் தடுக்கும் நோக்கில் மணல் மூட்டைகளை அடுக்கும் அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நேரடி மேற்பார்வையில், மாதம்பை இராணுவ முகாமின் 57ஆவது படைப்பிரிவுக்குட்பட்ட 7ஆவது கஜபா படையணியின் இராணுவத்தினரும் உள்ளூர் மக்களும் இணைந்து இரவு பகலாக மணல் மூட்டைகளை அடுக்கி, ஆற்றங்கரையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் துரித நடவடிக்கைகளால் கிராமங்கள் உடனடி வெள்ள அபாயத்திலிருந்து தற்காலிகமாகப் பாதுகாக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ச்சியாகப் பெருமழை பெய்தால் மணல் மூட்டைகளையும் தாண்டி வெள்ளநீர் பாயக்கூடும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, அணைக்கட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, எதிர்கால வெள்ள அபாயங்களைத் தவிர்க்கும் வகையில், அப்பகுதியில் உடனடியாக நிரந்தரக் கொங்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1259548

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time