மட்டக்களப்பு ஆழ்கடலில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பு; பொலிஸார் விசாரணை.!!!
மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுப் பகுதிக்கு நேராக அமைந்துள்ள ஆழ்கடல் பகுதியில், ஆண் ஒருவரின் சடலம் மிதந்துகொண்டிருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியிலிருந்து படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களே, கடலில் சடலம் மிதப்பதைக் கண்டு அதனைத் தமது கையடக்கத் தொலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர்.
குறித்த சடலம் கடுமையாக அழுகிய நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், சடலம் மட்டக்களப்பு, கல்லடி, ஏறாவூர் அல்லது காத்தான்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கடற்கரைப் பகுதிகளில் ஏதேனும் ஓர் இடத்தில் கரையொதுங்கக்கூடும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், சடலத்தின் அடையாளம் மற்றும் அது கடலில் மிதந்துகொண்டிருப்பதற்கான காரணம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
