உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 25, 2026

Hot News

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

வங்காள விரிகுடாவில் 27ஆம் திகதி பலத்த சூறாவளி உருவாகும் சாத்தியம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை.!!!

• மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் – கடல் அலைகள் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.

வங்காள விரிகுடாவின் மேற்கு–மத்திய கடற்பகுதியில் எதிர்வரும் 27ஆம் திகதி காலை பலத்த புயல் உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீவைச் சூழவுள்ள கடற்பகுதிகளுக்கான அடுத்த 24 மணித்தியால வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள திணைக்களம், வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் படிப்படியாக வலுவடைந்து சூறாவளியாக மாறக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் அறிக்கையின்படி, வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் நேற்று (25) காலை 8.30 மணியளவில் வட அகலாங்கு 15.3 பாகை மற்றும் கிழக்கு தீர்க்காங்கு 91.2 பாகைக்கு அருகில் மையம் கொண்டிருந்தது.

இந்தத் தொகுதியானது வங்காள விரிகுடாவின் கிழக்கு–மத்திய மற்றும் அதனை அண்டிய தென்கிழக்குப் பகுதிகள் ஊடாக நகர்ந்து, ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைவதற்கு அதிக சாத்தியம் காணப்படுகின்றது.

தொடர்ந்து தெற்கு நோக்கி நகரும் இத்தொகுதி, படிப்படியாகத் திசைமாறி மேற்கு நோக்கிச் சாய்வாக வடமேற்குத் திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்படி, இன்று (26) காலை சூறாவளியாகவும், நாளை மறுதினம் (27) காலை வங்காள விரிகுடாவின் மேற்கு–மத்திய கடற்பகுதியில் பலத்த புயலாகவும் தீவிரமடையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு விசேட எச்சரிக்கை

வட அகலாங்கு 10 முதல் 20 பாகை வரையிலும், கிழக்கு தீர்க்காங்கு 80 முதல் 95 பாகை வரையிலும் அமைந்துள்ள கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கடற்பகுதிகளில் ஏற்கனவே மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அடுத்தடுத்த வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை அறிக்கைகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் பலத்த காற்று

இதற்கிடையில், நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும். திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

குறித்த கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் அதேவேளை, நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பகுதிகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

2.5 மீற்றர் வரை உயரக்கூடிய கடல் அலைகள்

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாகப் பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் கடல் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த கடற்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அக்காலப்பகுதியில் கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையை அடையக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வானிலை எச்சரிக்கைகளைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1259602

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time