நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் மோதல்; இருவர் உயிரிழப்பு – 27 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.!!!
நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இரு கைதிகள் உயிரிழந்ததுடன், சுமார் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த கைதிகள் நீர்கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலுக்கான காரணம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளும், தொடர்புடைய பாதுகாப்புத் தரப்பினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





