உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

தண்டவாளமின்றி சாலையில் பயணித்த M5-781 எஞ்சின்; இலங்கை புகையிரத வரலாற்றில் புதிய சாதனை.!!!

இலங்கை புகையிரத சேவை வரலாற்றில் முதன்முறையாக, தண்டவாளங்களைப் பயன்படுத்தாமல் புகையிரத எஞ்சின் ஒன்று பிரதான சாலை வழியாக வெற்றிகரமாக எடுத்துச் செல்லப்பட்ட வரலாற்றுச் சம்பவம் நேற்று (03) இரவு இடம்பெற்றது.

M5 வகையைச் சேர்ந்த 781 இலக்க புகையிரத எஞ்சின், கண்டியிலிருந்து பேராதனை நோக்கி விசேட கனரக போக்குவரத்து வாகனத்தின் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எடுத்துச் செல்லப்பட்டது.

மலையகப் புகையிரதப் பாதையில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான சேதங்களை விரைவாகச் சீரமைக்கும் பணிகளுக்கு தேவையான எஞ்சினை இலக்கிடத்திற்கு கொண்டு சேர்க்கும் நோக்கிலேயே இந்த மாற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

டிட்வா புயலால் கடுகண்ணாவ – கம்பளை இடையிலான புகையிரத தண்டவாளங்கள் கடுமையாக சேதமடைந்ததால், அந்தப் பகுதியில் புகையிரத சேவை பாதிக்கப்பட்டதுடன், சீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான எஞ்சின்களையும் வழமையான தண்டவாளப் பாதை வழியாக கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

அதேவேளை, பேராதனை களுபாலம் பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக கண்டி – பேராதனை புகையிரதப் பாதையும் தற்காலிகமாக மூடப்பட்டிருந்ததால், பிரதான சாலை வழியாக எஞ்சினை எடுத்துச் செல்லும் மாற்று தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசேட கனரக போக்குவரத்து வாகனம், போக்குவரத்து பொலிஸார் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் இந்த நடவடிக்கை பாதுகாப்பாக முன்னெடுக்கப்பட்டது. பல மணி நேரம் நீடித்த இந்த போக்குவரத்து நடவடிக்கை எவ்வித இடையூறும் இன்றி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்தப் பயணத்தின் மூலம், மகாவலி கங்கை மீது அமைந்துள்ள பிரதான சாலைப் பாலத்தை கடந்து பயணித்த முதல் புகையிரத எஞ்சின் என்ற வரலாற்றுச் சிறப்பையும் M5-781 எஞ்சின் பெற்றுள்ளது.

இந்த அபூர்வமான நிகழ்வை நேரில் காண ஏராளமான பொதுமக்கள், புகையிரத ஆர்வலர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் வீதியோரங்களில் திரண்டிருந்தனர். சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

மலையகப் புகையிரதப் பாதையின் சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த புதுமையான நடவடிக்கை, இலங்கை புகையிரத வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 950678

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time