உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 15, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

வெளிநாடு செல்லும் எந்தவொரு இலங்கையரும் தனித்து நிற்பதாக உணரக்கூடாது – ஜனாதிபதி அநுர.!!!

அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்ட தீர்மானத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வெளிநாடுகளுக்குச் சென்று வாழ்வாதாரத்தைத் தேடும் எந்தவொரு இலங்கையரும் தாங்கள் தனித்து நிற்பதாக உணரக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்துச் செய்து சவூதி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று, ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டமை, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், இந்த வழக்கை மிகுந்த கவலையுடன் பின்தொடர்ந்து வந்த அனைத்து இலங்கையர்களுக்கும் பெரும் நிம்மதியை அளிக்கிறது.

இந்தத் தீர்மானம், பொறுமையான இராஜதந்திரத்தின் பெறுமதியையும், நட்பு நாட்டின் சட்ட நடைமுறைகளுக்கு வழங்கப்படும் மரியாதையையும், வெளிநாட்டில் வாழும் இலங்கைப் பிரஜை ஒருவருக்காகப் பலரும் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது.

இந்த முக்கியமான தீர்மானத்திற்காக சவூதி அரேபிய அரசாங்கத்துக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், இந்த முயற்சியில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய சவூதி அரேபியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டக் குழுவினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனோஜன் சிவராசா மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும், எஞ்சியுள்ள சட்ட நடைமுறைகள் நிறைவடையும் வரை எனது அரசாங்கம் தொடர்ந்து வழங்கும்.

வாழ்வாதாரத்தைத் தேடி நாட்டை விட்டு வெளியேறும் எந்தவொரு இலங்கையரும் தாங்கள் தனித்து நிற்பதாக ஒருபோதும் உணரக்கூடாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1233466

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time