உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

நாட்டுக்காக பொறுப்பு வழங்கப்பட்டால் ஏற்கத் தயார் – ஷவேந்திர சில்வா.!!!

முன்னாள் ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, நாட்டின் நலன் கருதி ஏதேனும் பொறுப்புகள் வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொண்டு செயல்படத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தனக்கு செயற்பாட்டு அரசியலுக்குள் நுழைய எந்தவித எண்ணமும் இல்லை என்றும், எந்த அரசியல் மேடையிலும் இணைந்து செயல்படத் திட்டமிடவில்லை என்றும் கூறினார்.

எனினும், நாட்டின் நலனுக்காக தனது அனுபவமும் திறமையும் தேவைப்படும் வகையில் ஏதேனும் பொறுப்புகள் வழங்கப்பட்டால், அவற்றை நிறைவேற்ற எப்போதும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், தன்னுடன் இணைந்து போராடிய மற்றும் போரில் காயமடைந்து மாற்றுத்திறனாளிகளான முன்னாள் படைவீரர்களின் நலனே தனது முதன்மை நோக்கமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாம் போராடியது எந்த இனத்திற்கும் எதிராக அல்ல; பயங்கரவாதத்திற்கே எதிராக என்றும், இருந்தபோதிலும் சில மேற்கத்திய நாடுகள் இன்றளவும் தங்களை அநியாயமான முறையில் நடத்தி வருவதாகவும் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 930009

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time