வீதி விபத்துகளில் 2,095 பேர் பலி; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்.!!!
இந்த ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 2,095 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் நாட்டில் மொத்தமாக 1,988 பாரிய வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துகளில் மோட்டார் சைக்கிள் விபத்துகள் அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும், மதுபோதையில் வாகனம் செலுத்தியதன் காரணமாக இடம்பெற்ற விபத்துகளின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருப்பதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வீதிப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, பொறுப்புடன் வாகனங்களை செலுத்துவதன் மூலம் வீதி விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன சாரதிகள் மற்றும் வீதியைப் பயன்படுத்தும் அனைவரும் அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்படுவது உயிர்களைப் பாதுகாப்பதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.