உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

இலங்கையில் சமையல் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு இல்லை; அச்சமடையத் தேவையில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.!!!

• 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது; விநியோக நடவடிக்கைகள் ஆரம்பம்.

இலங்கைச் சந்தையில் தற்போது சமையல் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு எதுவும் இல்லை என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனத் தெரிவித்த அமைச்சர், 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று மாலைதீவிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பம்

குறித்த கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் விநியோக நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எரிவாயு விநியோகத்தை வழமைபோன்று முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

2027ஆம் ஆண்டுக்கான விநியோக ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி

இதற்கிடையில், லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்துக்கு 2027ஆம் ஆண்டிற்கான திரவப் பெற்றோலிய வாயு (LPG) விநியோக ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1231367

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time