உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 12, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

இலங்கை முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை! சில பகுதிகளில் 150 மி.மீ. வரை மழை பெய்யக்கூடும்.!!!

• ஒக்டோபர் 12 முதல் மழை தீவிரமடையலாம்; அனர்த்தங்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.

இலங்கையில் இன்று (12) இரவு முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய வானிலை நிலைமை மற்றும் அதன் சாத்தியமான பாதிப்புகள் தொடர்பாக இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.கே. விஜேமான்னகே இதனைத் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவும் வளிமண்டலத் தளம்பல் நாளை (13) முதல் குறைந்த காற்றழுத்தப் பிரதேசமாக உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையான கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரண்டாவது இடைப்பருவ மழைக்கால நிலைமை, எல் நினோ தாக்கம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் காரணமாக மழையின் தீவிரம் மாறுபடக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.

இந்த வானிலை மாற்றங்களின் தாக்கம் நாளை முதல் 168 மணித்தியாலங்கள் வரை, அதாவது ஏழு நாட்கள் உணரப்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள், முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டு, அவசர நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான அறிவுறுத்தல்: கனமழை காரணமாக வெள்ளம், மண்சரிவு மற்றும் வீதிப் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும். அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, உத்தியோகபூர்வ வானிலை மற்றும் அனர்த்த எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1224949

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time