அமெரிக்காவின் நன்கொடையாக 10 TH-57 ‘சீ ரேஞ்சர்’ ஹெலிகொப்டர்கள் இலங்கையை வந்தடைந்தன.!!!
அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து TH-57 ‘சீ ரேஞ்சர்’ பல்நோக்கு ஹெலிகொப்டர்கள் கடல் மார்க்கமாக இலங்கையை வந்தடைந்துள்ளன.
இலங்கை விமானப்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த புதிய விமானத் தொகுதி, விமானப்படையின் நீண்டகால செயற்பாட்டு மற்றும் பயிற்சி தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த ஹெலிகொப்டர்கள் இலங்கை விமானப்படையின் விமானப் பிரிவை வலுப்படுத்துவதுடன், பல்வேறு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் பயன்படவுள்ளன.
நாட்டை வந்தடைந்துள்ள பத்து ஹெலிகொப்டர்களும் தற்போது ரத்மலான விமானப்படைத் தளத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப பரிசோதனை நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த நன்கொடை அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

