உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 16, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு – 11 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.!!!

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 11 ஆயிரம் கோடி ரூபாய் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால் தெரிவித்தார்.

அமைச்சர் தெரிவித்ததாவது, நாட்டின் பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, நிதி நிலைகளை நிலைப்படுத்தும் முயற்சியின் கீழ் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரச சேவையை திறன் வாய்ந்ததாக மாற்ற, டிஜிட்டல் மயப்படுத்தலுக்காக பல மில்லியன் ரூபாய் நிதி இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றவாளிகள் கைது செய்யப்படும் போது அவர்களின் விவரங்களை ஊடகங்களுக்கு வெளியிடுவது தொடர்பில் புதிய நடைமுறை வகுக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என பொலிஸ்மா அதிபர் அறிவித்தார்.

அதே நேரத்தில், ஊடகங்களுக்கு தகவல்கள் வழங்குவதை தடுக்க அரசாங்கத்துக்கு ஏதேனும் நோக்கம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒதுக்கீடு அரச ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியாகவும், நாட்டின் நிதி நிலைகளை நிலைப்படுத்தும் நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 814981

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time