உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

நாடு முழுவதும் 16 புதிய இதயச் சிகிச்சை ஆய்வகங்கள்: ரூ.3.1 பில்லியன் செலவில் திட்டம் ஆரம்பம்.!!!

இலங்கையின் இதயச் சிகிச்சை சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு நாடளாவிய ரீதியில் உள்ள அரச மருத்துவமனைகளில் 16 புதிய இதயச் சிகிச்சை ஆய்வகங்கள் (Cath Labs) அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்காக சுமார் ரூ.3.1 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த ஆய்வகங்கள் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தேசிய மற்றும் போதனா மருத்துவமனைகளில் நிறுவப்படவுள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) ஆகியவற்றின் நிதி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

புதிய ஆய்வகங்கள் மூலம் இதயத் தமனிகளில் உள்ள அடைப்புகளை கண்டறியும் பரிசோதனைகள், அடைப்பு நீக்கி பொருத்துதல் மற்றும் இதயத் துடிப்பு சீராக்கிகள் (Pacemaker) பொருத்துதல் உள்ளிட்ட நவீன இதய சிகிச்சைகள் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் உள்ள 10 இதயச் சிகிச்சை ஆய்வகங்களுடன் புதிய 16 ஆய்வகங்கள் இணைக்கப்பட்டால், அரச துறையின் மொத்த எண்ணிக்கை 26 ஆக உயர்வதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விரிவாக்கத்தின் மூலம் மாரடைப்பு நோயாளிகளுக்கு 24 மணி நேர அவசர சிகிச்சை வசதியை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும், மாகாண மட்ட இதய சிகிச்சை திறன் இரட்டிப்பாக அதிகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதய சத்திரசிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் பட்டியலைக் குறைப்பதிலும் இது முக்கிய பங்காற்றும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 809186

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time