உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

டுபாயிலிருந்து 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் நாடு கடத்தல்: மஹவத்தே சாமர உள்ளிட்டோர் இலங்கையில்.!!!

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இன்று (22) காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தரையிறங்கவிருந்த பல விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டிருந்தன.

அவ்வாறு திருப்பி விடப்பட்ட சில விமானங்களிலேயே இந்த சந்தேகநபர்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டிற்கு அழைத்து வரப்பட்டவர்களில் பாதாள உலகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மஹவத்தே சாமர மற்றும் குடு துமிந்த ஆகியோரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹவத்தே சாமர மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 931786

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time