வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு: 33 கைதிகள் விடுதலை.!!!
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் 33 கைதிகள் இன்று (30) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களால் மொத்தமாக 61 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, பொதுமன்னிப்பு பெற்றவர்களில் 33 கைதிகள் இன்று சிறைகளிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதுடன், ஏனையோரின் விடுதலை தொடர்பான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படும் நடைமுறை தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


