உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 16, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

94ஆவது இலவச ஜனாஸா வாகனம் – சமூக மயப்படுத்தும் நிகழ்வு.!!!

(கற்பிட்டி – எம்.ஹெச்.எம். சியாஜ்)

கற்பிட்டி வரலாற்றில் முதன் முறையாக, மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட புதிய இலவச ஜனாஸா வாகனம், பிரயிட் ஹேன்ட் ஜனாஸா சங்கத்தின் பல வருட உழைப்பின் பலனாக தனது சேவையை சமூக மயப்படுத்தும் நிகழ்வு, கடந்த சனிக்கிழமை (22) மஸ்ஜிதுல் குபா பள்ளிவாயல் வளாகத்தில் ஜனாஸா சங்கத் தலைவர் ஏ.ஜே.எம். தாரிக் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், அகில இலங்கை ஜனாஸா மற்றும் அவசர சேவைகள் சங்கத் தலைவர் எம். காதர், பொதுச் செயலாளர் எம். ரியாத், பல மாவட்டங்களிலிருந்து வந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள், துறைசார் உலமாக்கள், ஊர் மக்கள் ஆகியோர் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அகில இலங்கை ரீதியிலான ஜனாஸா மற்றும் அவசர சேவைகள் சங்கத்தின் மேற்பார்வையில், நாடு முழுவதும் இதுவரை 93 ஜனாஸா வாகனங்கள் சேவையில் இணைந்திருக்கும் நிலையில், கற்பிட்டியில் அறிமுகமான இவ்வாகனம் 94ஆவது ஜனாஸா வாகனமாக சமூக சேவைக்குள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த முயற்சி, கற்பிட்டி பிரதேச மக்களின் ஒற்றுமை மற்றும் சமூகப் பணியாற்றும் மனப்பாங்கை வெளிப்படுத்தும் முக்கியத்துவமிக்க நிகழ்வாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 814967

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time