உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 26, 2026

Hot News

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

காத்தான்குடி கடற்கரையில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு: நகர சபை உடனடி நடவடிக்கை எடுக்க முன்னாள் தவிசாளர் முபீன் கோரிக்கை.!!!

காத்தான்குடி கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு காத்தான்குடி நகர சபை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகர சபையின் முன்னாள் தவிசாளர் U.L.M.N. முபீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (26) காலை காத்தான்குடி கடற்கரையில் அவதானிக்கப்பட்ட காட்சியைச் சுட்டிக்காட்டி, நகர சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடற்கரையை அண்மித்த பகுதியில் கழிவு முகாமைத்துவ நிலையம் அமைந்துள்ளதுடன், காத்தான்குடி நகரம் சுற்றுலாத் தலமாகவும் வளர்ச்சியடைந்து வருகின்றது. இந்நிலையில், கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், பொதுமக்கள், கடற்கரைக்கு வருகை தருவோர் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி ஏற்றுதல், கருத்தடை செய்தல் உள்ளிட்ட உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் காத்தான்குடி நகர சபை உரிய கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பையும் நகரின் சுகாதாரச் சூழலையும் உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் தவிசாளர் U.L.M.N. முபீன் வலியுறுத்தியுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1261414

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time