உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு.!!!

எயார்பஸ் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல் விவகாரம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் இன்று (09) தங்காலையில் அமைந்துள்ள கார்டன் இல்லத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அதுவரை உத்தியோகபூர்வ கடிதம் எதுவும் கையளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்து 24 மணித்தியாலங்கள் நிறைவடைந்த நிலையில், இந்த அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக 06 எயார்பஸ் A-330 ரக விமானங்களையும், 08 எயார்பஸ் A-350 ரக விமானங்களையும் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சமாகப் பெற்றதாக அந்நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்க ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

மேலும், விசாரணைகளின் போது தமக்குக் கிடைத்த 2 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 20 மில்லியன் ரூபாயை அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கும், 60 மில்லியன் ரூபாயை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் வழங்கியதாக கபில சந்திரசேன தெரிவித்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

எனினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தனது வாடிக்கையாளரை அச்சுறுத்தி இவ்வாக்குமூலத்தைப் பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் சத்தியக் கடதாசி ஒன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 933559

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time