உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

காத்தான்குடி கலாச்சார அதிகார சபைக்கு புதிய நிருவாகம் தெரிவு.!!!

– எம். ரி. எம்.யூனுஸ் –

காத்தான்குடி பிரதேச கலாச்சார அதிகார சபையின் பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிருவாக சபைத் தெரிவும், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் மௌலவி எம்.ஐ.எம். ஜவாஹிர் பலாஹியின் நெறிப்படுத்தலில் அதன் தலைவரும் காத்தான்குடி பிரதேச செயலாளருமான நிஹாறா மௌஜூத் (SLAS) தலைமையில் இன்று (22) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பிரதேச கலாச்சார அதிகார சபையின் கடந்தகால செயற்பாடுகள், அதன் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் பிரதேச கலைஞர்களால் வெளிக்கொணரப்பட்ட திறமைகள் தொடர்பில் அதிகார சபையின் தலைவர் நிஹாறா மௌஜூத் தலைமை உரையாற்றினார்.

இதன்போது, பிரதேச கலைஞர்களின் அர்ப்பணிப்பான பணிகள் மற்றும் கலாச்சார அதிகார சபையின் வளர்ச்சிக்காக பிரதேச செயலாளர் வழங்கிவரும் ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புகள் தொடர்பில் அதிகார சபையின் செயலாளர் இல்மி அகமட் லெவ்வை உரையாற்றினார்.

தொடர்ந்து, கலாச்சார உத்தியோகத்தரால் கணக்கறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரு வருடத்திற்கான புதிய நிருவாக சபை தெரிவு இடம்பெற்றது.

புதிய நிருவாக சபை

– தலைவர்: நிஹாறா மௌஜூத் (பிரதேச செயலாளர் – பதவி ரீதியாக)
– பிரதித் தலைவர்: ரீ. எல். ஜவ்பர்கான்
– செயலாளர்: எம்.ஏ.எம். சுல்மி
– பொருளாளர்: எச்.எம். இக்பால் கான்
– உப செயலாளர்: அஜீறா கலீல்தீன்

நிருவாக உறுப்பினர்களாக பாவலர் சாந்தி முகைதீன், ஏ.எல்.எம். சித்தீக், எம்.எம். அமீர் அலி, மௌலவி எம்.எச்.எம். இக்பால் பலாஹி, எம்.ஏ.சி. றபாய்தீன், செரண்டிப் முஸ்தபா, எம்.ரி.எம். யூனுஸ், இல்மி அஹமட் லெப்பை, எம்.எச்.எஸ். பெளஸியா, எம்.எம். ஸாகிர் ஹுசைன், அபூ மின்ஹாஜ், ஏ.எம். ஸாதிகீன், ஏ.ஜி.எம். பழீல், கே.எல். கமர்தீன், எம்.ஐ.எம். முஸ்தபா, எம்.எஸ்.எம். சஜீ, பஹத் எம். ஜுனைட் மற்றும் எம்.எஸ். சாஜித் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். இதிலிருந்து ஐவர் ஆலோசகர்களாக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் கிராம நிருவாக உத்தியோகத்தர் எம்.எம். ஜரூப், கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த கலை, இலக்கியவாதிகள், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1082354

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time