மு.மீ. அமீர் அலியின் ‘தகரும் தளைகள்’ நூல் காத்தான்குடியில் வெளியீடு.!!!
– எம். ரி. எம்.யூனுஸ் –
காத்தான்குடி மு.மீ. அமீர் அலி எழுதிய ‘தகரும் தளைகள்’ சிறுகதை நூலின் வெளியீட்டு விழா நேற்று (21) காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
எம்.ஏ. ஜூஸாத்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் முதன்மை அதிதியாகவும், சிறப்பு அதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், விடிவெள்ளி பத்திரிகையின் பிரம ஆசிரியருமான எம்.பி.எம்.பைரூஸ் கலந்து சிறப்பித்தார்.
காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில், கல்வியலாளர்கள், கலை மற்றும் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நூலாசிரியர் மு.மீ. அமீர் அலியின் இலக்கியப் பணிகளைப் பாராட்டிய பங்கேற்பாளர்கள், சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சிக்கு இவ்வாறான படைப்புகள் முக்கிய பங்களிப்பை வழங்கும் எனக் கருத்துத் தெரிவித்தனர்.
‘தகரும் தளைகள்’ நூல் வெளியீட்டு விழா, காத்தான்குடியின் கலை மற்றும் இலக்கிய ஆர்வலர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.








