முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கைது
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை.!!!
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட இன்று (03) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டு, பிரித்தானிய கடற்படை அகடமிக்கு பயிற்சிக்காக அனுப்பியமை தொடர்பான விசாரணைக்காக அவர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகி விளக்கமளித்தார்.
அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதையடுத்து, விசாரணை ஆணைக்குழு அவரை கைது செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.