உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

லிட்ரோ சமையல் எரிவாயு விலை நள்ளிரவு முதல் குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு.!!!

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 4,765 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட சிலிண்டரின் புதிய விலை 4,465 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 118 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதால், 1,910 ரூபாவாக இருந்த அதன் விலை 1,792 ரூபாவாக குறைந்துள்ளது.

அதேவேளை, 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், 890 ரூபாவாக இருந்த அதன் புதிய விலை 835 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைகள் இன்று (03) நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வரும் என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215421

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time