உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

மூத்த குடிமக்களுக்கான அஸ்வெசும உதவித்தொகை நாளை வங்கிக் கணக்குகளில் வரவு.!!!

70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான “அஸ்வெசும்” நலன்புரி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான கொடுப்பனவுகள் நாளை (03) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் மொத்தம் 697,900 பயனாளிகளுக்கு 3,489,500,000 ரூபா நிதி வழங்கப்படவுள்ளது.

முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 621,761 மூத்த குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் 3,108,805,000 ரூபா வைப்பிலிடப்படவுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ், மேலும் 76,139 பயனாளிகளின் அஸ்வெசும் வங்கிக் கணக்குகளில் 380,695,000 ரூபா வைப்பிலிடப்படவுள்ளது.

இந்த கொடுப்பனவுகள் திட்டமிட்டபடி நாளை (03) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215419

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time