உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

போதைப்பொருள் வியாபாரி; விசேட அதிரடிப் படையினரால் கைது.!!!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப் படையினர் சனிக்கிழமை (31) கைது செய்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கையின் போது 39 வயதுடைய சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நீண்ட நாட்களாக மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்ததுடன், விற்பனைக்காக இருந்த ஐஸ் போதைப் பொருளையும் கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 510 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மற்றும் கல்முனை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214754

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time