உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!
IMG-20260906-WA0028
சீருடை மாறுகிறது; காவல்துறையும் மாறுமா?

Share :

சட்டத்தரணி ஹபீப் றிபானுக்கு நாடாளுமன்ற வாய்ப்பு; முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமனம்.!!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். பாசித் இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, கட்சியின் உயர்பீட உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹபீப் றிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர், குறித்த வெற்றிடத்திற்கு ஹபீப் றிபானின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு பரிந்துரைத்திருந்தார்.

இதனடிப்படையில், சட்டத்தரணி ஹபீப் றிபான் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமிடமிருந்து இன்று (21) அவர் உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டார்.

இதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான புதிய நியமனம் உத்தியோகபூர்வமாகியுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1169700

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time