உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!
IMG-20260906-WA0028
சீருடை மாறுகிறது; காவல்துறையும் மாறுமா?

Share :

அனோஜன் விவகாரத்தில் சவூதியிடம் எழுத்துமூல கோரிக்கை; ஜனாதிபதி பெற்றோருடன் சந்திப்பு.!!!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் பெற்றோரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

இதன்போது, சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் இயன்றளவு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விடயத்தில் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தலையீடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, சவுதி அரேபிய அரசரிடம் அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூல கோரிக்கையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்தல் உள்ளிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடாக இதுவரை உத்தியோகபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் அனோஜனின் பெற்றோருக்கு ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

குறித்த நடவடிக்கைகள் தொடர்ந்து நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1169895

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time